சீனாவில் கூலித்தொழிலாளி 149 வீடுகளை வாங்கியது எப்படி? காவல்துறை அதிர்ச்சி
சீனாவில் மாத சம்பளத்தில் பணிபுரியும் ஒரு தொழிலாளில் 110 மில்லியன் யென் மதிப்பிலான 149 வீடுகளை வாங்கியுள்ளதாக வெளிவந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சீனாவை சேர்ந்த லின்பவோ என்பவர் நஞ்சாங் நகரின் உயர்தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரும் இவருடைய மருமகனும் கிரெடிட் கார்ட் மோசடி மூலம் குவித்த பணத்தில் அந்த பகுதியில் மட்டும் 149 வீடுகளை வாங்கி குவித்துள்ளதால போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்ததில் லின்பவோ மற்றும் அவருடைய மருமகனும் சேர்ந்து நவீன முறையில் கிரெடிட் கார்டு மோசடி செய்து மில்லியன் கணக்கில் பணம் குவித்த விஷயம் தெரிய வந்தது.
தற்போது இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.