25 வருடங்களாக சீனாவின் சாலையின் நடுவில் இருக்கும் வீடு.

china houseசீனாவில் உள்ள ஒரு கிராமத்தை காலி செய்துவிட்டு அங்கு புதிய குடியிருப்புகள் கட்ட அந்நாட்டு அரசு முடிவு செய்தது. அங்கு குடியிருந்தவர்களுக்கு தேவையான இழப்பீடு கொடுத்து குடியிருப்பு வீடுகள் கட்ட கடந்த 1990ஆம் ஆண்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஒரே ஒருவர் மட்டும் தனது வீட்டை அரசுக்கு தராமல் பிடிவாதமாக இருப்பதால் தற்போது அனனத்து பணிகளும் முடிந்துவிட்டபோதும் ஒரே ஒரு வீடு மட்டும் சாலையின் மத்தியில் இருப்பதால் அங்கு குடியிருக்கும் மக்கள் பெரும் பிரச்சனையில் சிக்கி தவித்து வருகின்றனர்.

சீனாவில் சொந்த வீடு வைத்திருக்கும் ஒருவரிடம் இருந்து கட்டாயப்படுத்தி அவருடைய வீட்டை வாங்க முடியாது. அவராகவே கொடுக்க முன்வந்தால் மட்டுமே வாங்க முடியும். புதிய குடியிருப்பின் நடுவில் உள்ள நபர் எதற்காக அந்த வீட்டை தர மறுக்கின்றார் என்ற காரணம் யாருக்கும் தெரியவில்லை. இருப்பினும் அவர் தனது வீட்டை தர மறுத்ததால் ஒருசிலர் சில கிலோ மீட்டர் சுற்றி தங்கள் வீட்டை வந்தடைகின்றனர்.

இரண்டு பக்கமும் பெரிய குடியிருப்பு வீடுகள் இருக்கும் நிலையில் சாலையின் நடுவே அந்த நபரின் சிறிய வீடு இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றது.

Leave a Reply