[carousel ids=”65246,65247,65248,65249,65250,65251,65252″]
சீனாவில் ஒருவர் புத்தம் புதிய கார் ஒன்றை 680,000 சீன யான்கள் கொடுத்து வாங்கியுள்ளார். கார் வாங்கியதில் என்ன செய்தி இருக்க முடியும் என நினைப்பவர்களுக்கு திகைக்க வைக்கும் ஒரு சஸ்பென்ஸ் காத்திருக்கின்றது. இந்த பணத்தை அவர் ஒரு யான் நாணயமாக 660,000 நாணயங்களை கார் வாங்கும் கடைக்கு கொண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவில் ஒருவர் புதிய கார் ஒன்றை வாங்குவதற்காக 660,000 யான் மதிப்புள்ள நாணயங்களை லாரியில் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த நாணயங்களை பார்த்ததும் கார் விற்பனையாளர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் பத்து ஊழியர்களை அனுப்பி அந்த நாணயங்களை அவர் இறக்க செய்து அதன்பின்னர் காரை அவருக்கு டெலிவரி செய்தார்.
இந்த நாணயங்களை லாரியில் இருந்து இறக்குவதற்கு மட்டும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டதாகவும், மீண்டும் இந்த நாணயங்களை வங்கிக்கு கொண்டு செல்வதற்கு பல ஊழியர்கள் தேவைப்படுவார்கள் என்றும் கார் விற்பனையாளர் தெரிவித்தார். எனினும் இந்த வாடிக்கையாளர் எங்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுத்ததாகவும், அவருக்கு காரை விற்பனை செய்ததில் பெருமை அடைவதாகவும் கூறினார். நாணயங்கள் அனைத்தும் சிறுசிறு பண்டல்களாக ஒரு பேப்பரில் சுற்றப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.