செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்ற பெண் மீது டிரக் மோதி பலி. அதிர்ச்சி வீடியோ

[carousel ids=”63847,63848,63849,63846″]

accident 1சாலைகளில் நடந்து செல்லும்போதோ அல்லது வாகனங்களில் செல்லும்போதோ செல்போன்களில் பேசிக்கொண்டே செல்வது மிகவும் ஆபத்தானது என உலகம் முழுவதும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்தபோதிலும், பலர் இன்னும் செல்போன் உபயோகித்து கொண்டேதான் பயணம் செய்கிறது. இந்த செயல் அவர்களுடைய உயிருக்கே ஆபத்தாக சிலசமயம் முடிந்து விடுகிறது.

சீனாவில் உள்ள குவாங்டங் என்ற மாகாணத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் சாலையை கடக்கும்போது செல்போனில் பேசிக்கொண்டே சென்றார். அப்போது அவருடைய வலது பக்கத்தில் இருந்து வந்த ஒரு டிரக் ஒன்று மோதியதால் அவர் தூக்கி வீசப்பட்டார். இந்த சமயம் அவரது இடது பக்கத்தில் இருந்து வந்த இன்னொரு டிரக் அவருடைய தலைமீது ஏறியது. இதனால் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி மரணம் அடைந்தார்.

இந்த அதிர்ச்சி காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு ஆகியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த விபத்தின் வீடியோ தற்போது இணையதளங்களிலும், ஃபேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இனியாவது பொதுமக்கள் நடந்து செல்லும்போதோ அல்லது வாகனங்களில் செல்லும்போதோ செல்போன்களை உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது

https://www.youtube.com/watch?v=AAIZ_d4xIlY

Leave a Reply