2 நாள் பயணமாக இந்தியா வருகிறார் சீன அதிபர். சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு.

chinese-president_350__091714081121இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் சீன அதிபர் ஜிங்பிங் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொழிற் பூங்காக்களை அமைப்பது குறித்து அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிடுவார் என கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி இந்திய வருகையின்போது சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள் கொள்முதல் ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திடவுள்ளார். மேலும் வணிகம், பொருளாதார ஒத்துழைப்பு குறித்த 16 ஒப்பந்தங்களை இந்திய அரசுடன் கையெழுத்திட சீன முடிவு செய்துள்ளது. இவற்றில் கர்நாடகாவில் அதிவேக ரயில் பாதை அமைப்பது உள்ளிட்டவை அந்த ஒப்பந்தங்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்

சீன அதிபர் இன்று அகமதாபாத் விமான நிலையத்தில் வரவுள்ளதால் அவரை வரவேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அகமதாபாத் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அகமதாபாத் வந்திறங்கியவுடன் இந்திய பிரதமருடன் சீன அதிபர் காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தவுள்ளார்.

Leave a Reply