காணாமல் போன MH370 விமானத்தை கண்டுபிடிக்க தயார் நிலையில் சீனாவின் அதிநவீன கப்பல்

காணாமல் போன MH370 விமானத்தை கண்டுபிடிக்க தயார் நிலையில் சீனாவின் அதிநவீன கப்பல்

Malaysia Flight MH370கடந்த 2014ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற மலேசிய விமானம் MH 370 விமானத்தை கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகள் தீவிர முயற்சிகள் எடுத்து, அந்த விமானம் குறித்தும் அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பயணிகள் குறித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணிக்காக அதி நவீன கப்பல் ஒன்றை சீன அரசு அனுப்பியிருப்பதாக நேற்று செய்தி வெளியாகியுள்ளது.

‘டாங்க் ஹை ஜியு 101’ என்ற இந்தக் கப்பலில் அதிநவீன சோனார் ஒலி உணர்வு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் வரும் 10-ம் தேதி முதல் இந்தக் கப்பல் தென் இந்தியப் பெருங்கடலில் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியை தொடங்கும் என்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியப் பெருங்கடலின் கடற்படுகையின் கரடுமுரடான பகுதிகளில், ஆய்வாளர்கள் நெருங்கிச் சென்று நுணுக்கமாக ஆய்வு செய்ய இந்தக் கப்பல் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மலேசிய விமானம் MH 370 விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து மூழ்கி விட்டதாகவும், அதில் இருந்த 4 இந்தியர்கள் உட்பட அனைவரும் இறந்து விட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது. எனினும் இதுவரை, அந்த விமானத்தின் சிதிலங்களில் ஒரேயொரு பகுதி மட்டும் பிரெஞ்சுத் தீவான ரீயூனியன் கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply