தமிழக கடல் எல்லையில் நுழைய முயன்ற சீன கப்பல் விரட்டியடிப்பு

தமிழக கடல் எல்லையில் நுழைய முயன்ற சீன கப்பல் விரட்டியடிப்பு

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் எல்லைகளை குறிவைத்து சீனாவின் நடவடிக்கை இருந்து வருகிறது. குறிப்பாக அருணாச்சல பிரதேச மாநித்திற்கு சொந்தம் கொண்டாடி வரும் சீனா சமீபத்தில் அம்மாநிலத்திற்கு தெற்கு திபெத் என்ற பெயரை வைத்து அட்டுழியம் செய்தது.

இந்த நிலையில் இந்தியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள கடல் எல்லையான தமிழக கடல் எல்லைப்பகுதியில், சீனாவின் கப்பல் ஒன்று நுழைய முயன்றதாகவும், அதனை கண்ட இந்திய கப்பல் படை, சீனாவின் கப்பலை விரட்டி அடித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த சம்பவத்தின் போது இருநாட்டு கப்பல் படையினர்கள் இடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதாக உறுதி செய்யப்படாத தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவின் அனுமதியின்றி இந்திய கடல் எல்லையில் நுழைய முயன்ற சீன கப்பல் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply