காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லாத இந்தியா. சீன தொலைகாட்சியின் சர்ச்சை ஒளிபரப்பு

chinaபாரத பிரதமர் நரேந்திர மோடி தற்போது சீனாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் சீனாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இந்திய  வரைபடத்தை தவறாக வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தை உலகமே உற்று நோக்கி பார்த்து வருகிறது. ஆசியாவின் இரண்டு பெரிய நாடுகள் செய்து கொள்ள இருக்கும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றை உலகின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் உற்று நோக்கி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் சீன சுற்றுப்பயணத்தை பற்றி தொகுத்து வழங்கியசீனாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சிசிடிவி தொலைக்காட்சி, ஜம்மு காஷ்மீர்  மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இல்லாத இந்தியாவின் வரைபடத்தை ஒளிபரப்பியதால் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே இந்தியாவுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள் தங்கள் நாட்டின் பகுதிகள் என்று சீனா கூறி நிலையில் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பிய இந்திய வரைபடத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆசியாவின் மிகப்பெரும் நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவில் பெரும் சிக்கலாக உள்ள இந்த பிரச்சினையை சிறப்பு பிரநிதிகள் மூலம் தீர்க்க இருநாடுகளும் முயன்று வரும் நிலையில் இந்த தொலைக்காட்சி இருநாட்டு நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் இந்த வரைபடத்தை ஒளிபரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply