கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக இருந்த தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் அவருடைய 150வது படம் என்பதால் இந்த படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கவுள்ளதாக உறுதியான தகவல் வந்த நிலையில் இந்த படத்தின் நாயகிகளின் தேடுதல் வேட்டை இதுவரை நடந்து வந்தது. நயன்தாரா மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிப்பார்கள் என கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில் நயன்தாரா கேட்கும் சம்பளத்தால் சிரஞ்சீவி உள்பட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிரஞ்சீவுக்கு ஜோடியாக நடிக்க தனக்கு சம்பளமாக மூன்று கோடி வேண்டும் என்றும், ஒப்பந்தமாகும் அன்றே இரண்டு கோடி அட்வான்ஸ் தரவேண்டும் என்றும், மீதி ஒரு கோடியை படப்பிடிப்பின் ஆரம்ப நாளிலேயே தரவேண்டும் என்றும் நயன்தாரா கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் கண்டிஷன்களை கேட்டு படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
தெலுங்கு முன்னணி நடிகைகளான இலியானா, அனுஷ்கா, ஆகிய நடிகைகள் ஒரு கோடிக்கு அதிகமாக இதுவரை வாங்கியதில்லை. இந்நிலையில் இவருக்கு கொடுக்கும் சம்பளத்தை வைத்து இரண்டு ஹீரோயின்களை புக் செய்துவிடலாம் என்றும் நயன்தாராவை படத்தில் இருந்து தூக்கிவிடலாம் என்றும் படக்குழுவினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.