சீரஞ்சிவி ராஜினாமா – வலுக்கிறது ஆந்திரா பிரிப்பு போராட்டம்

ஆந்திரா பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதை பல்வேறு தரப்பினர் எதிர்த்து வருகிறார்கள். போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆந்திரா முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் தனது எதிர்ப்பை தெரிவித்தார். பல்வேறு எம்.பி, எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.  தற்போது தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் நடிகர் சிரஞ்சீவி தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமாக் கடிதத்தை நேற்று இரவு பிரதமர் அலுவலகத்திற்கு அவர் பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். இன்று அவர் பிரதமரை நேரில் சந்திக்கிறார்.

கடலோர ஆந்திரா பகுதியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. ஏற்கனவே தெலுங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரஞ்சீவி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இருப்பினும் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்து வந்தார் சிரஞ்சீவி. இந்த நிலையில் நேற்று தெலுங்கானா தனி மாநிலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் சிரஞ்சீவி.
இது வரை சீமாந்திரா பகுதியை சேர்ந்த 15 அமைச்சர்கள், 50 எம்.எல்.ஏ.க்கள், 10 எம்.எல்.சி.க்கள், 2 எம்.பி.க்கள் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். நிதியமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், இனியும் காத்திருக்காமல் ராஜினாமா செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. பல்லம் ராஜுவும் விலகல் சிரஞ்சீவியைப் போலவே, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜூ, ரயில்வே இணை அமைச்சர் சூர்ய பிரகாஷ் ரெட்டி, ஜவுளித்துறை இணை அமைச்சர் சாம்பசிவ ராவ் ஆகியோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

தண்டனை பெற்ற எம்.பிக்களைப் பாதுகாக்கும் அவசர சட்டம் தொடர்பாக முட்டாள்தனமானது என்ற ராகுல் காந்தி குறிப்பிட்டார். இதற்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. வளரும் தலைவர் ஒருவர் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாமா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் கடினமான வார்த்தையைப் பயன்படுத்திவிட்டதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அவசர சட்டம் ‘முட்டாள்தனமானது’ என்ற கருத்து இதயத்தில் இருந்து வெளி வந்தது.

‘முட்டாள்தனமானது’ என்ற வார்த்தை கடினமானது என்று என் அம்மா சோனியா காந்தி என்னிடம் கூறினார். ராகுல் வருத்தம் நான் பயன்படுத்தியது கடினமான வார்த்தையாக இருந்தாலும் என்னுடைய உணர்வுகள் மிகவும் சரியானது. இனி அதுபோன்ற கடினமான வார்த்தைகளை நான் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுவேன் என்றார்.

Leave a Reply