பின்னணி பாடகி சித்ராவின் மகள் 3 வது நினைவு தினம். ஃபேஸ்புக் ரசிகர்கள் பிரார்த்தனை

9a

பிரபல பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ராவின் 9 வயது பெண் குழந்தை இறந்து மூன்று வருடங்கள் ஆனதை ஒட்டி அவரது கேரளா வீட்டில் கடந்த 14ஆம் தேதி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு சித்ரா, தனது கணவருடன் துபாயில் நடக்கவிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, சித்ராவின் பெண் குழந்தை நந்தனா, அந்த ஓட்டலில் இருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்து மரணம் அடைந்தார். ஒரே மகளின் மரணம் காரணமாக இரண்டு வருடங்களாக பின்னணி பாடகி சித்ரா, மனமுடைந்து வீட்டில் அமைதியாக ஓய்வு எடுத்தார். கடந்த ஒரு வருடமாகத்தான் அவர் மீண்டும் பாட வந்துள்ளார்.

நேற்று முன் தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சித்ரா, தனது ரசிகர்களிடம் “தனது மகளின் மூன்றாவது நினைவு தினத்தில், அவளது ஆத்மா சாந்தியடைய வேண்டிகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். Today is the day I lost my soul three years ago. Pray for my Nandana. – K.S. Chithra” என்று தெரிவித்த அவரது ஃபேஸ்புக் வேண்டுகோளுக்கிணங்கி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்ததாக பதிலளித்துள்ளனர்.

Leave a Reply