திருத்தணி முருகன் கோயிலில் 11-இல் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

திருத்தணி முருகன் கோயிலில் 11-இல் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

 thiruthani
 ஆறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஒவ்வொர் ஆண்டும் சித்திரைப் பெருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதுபோல் இந்தாண்டு சித்திரைப் பெருவிழா வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்குகிறது. விழாவையொட்டி காலை 7 மணிக்கு அனுக்ஞை அங்குபூணமும், விநாயகர் உலாவும், 12-ஆம் தேதி காலை 5 மணிக்கு கொடியேற்றமும், இரவு 7 மணிக்கு கேடய உலாவும் நடைபெறுகிறது

.
 13-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெள்ளி சூர்ய பிரபை, இரவு 7 மணிக்கு பூத வாகனத்திலும், 14-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சிம்ம வாகனத்திலும், இரவு 7 மணிக்கு ஆட்டு கிடாய் வாகனத்திலும், 15-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பல்லக்கு சேவையும், இரவு 7 மணிக்கு வெள்ளி நாக வாகனத்திலும், 16-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அன்ன வாகனத்திலும், இரவு 7 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்திலும் சுவாமி உலா வருகிறார். 17-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு புலி வாகனத்திலும், இரவு 7 மணிக்கு யானை வாகனத்தலும், 18-ஆம் தேதி இரவு 7 மணிக்கு தங்கத் தேரிலும், 19 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு யாளி வாகனத்திலும், இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்திலும் அருள்பாலிக்கிறார்.

 இரவு 8 மணிக்கு அருள்மிகு தெய்வானை அம்மையார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 20-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கேடய உலாவும், மாலை 5 மணிக்கு கதம்பப் பொடி விழாவும் இரவு 8 மணிக்கு சண்முக சுவாமி உற்சவமும், 21-ஆம் தேதி காலை 5 மணிக்கு தீர்த்தவாரியும், பின்னர் சண்முகசுவாமி உற்சவமும், மாலை 5 மணிக்கு கொடி இறக்கமும் நடைபெறுகிறது. 22-ஆம் தேதி மாலை 7 மணிக்கு சபதாபணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு தினசரி மூலவர் முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.
 

Leave a Reply