சித்தூர் பெண் மேயர் கத்தியால் குத்தி கொலை. குடும்பத்தகராறு காரணமா?
ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா மற்றும் அவரது கணவர் கட்டாரி மோகன் ஆகியோர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்று பர்தா அணிந்து வந்தஅடையாளம் தெரியாத இருவர் திடீரென, மேயர் அனுராதா அறைக்குள் நுழைந்து கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
பின்னர் அருகில் உள்ள அவரது கணவர் அறைக்கு சென்று அவரை கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் கடுமையாக தாக்கினர்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தில் அனுராதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், படுகாயமடைந்த கணவர் கட்டாரி மோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இருவர் சித்தூர் முதலாவது காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இருவரும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.