பழம்பெரும் நகைச்சுவை நடிகரும், பத்திரிகையாளரும், பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பருமான சோ திடீர் உடல் நலக்குறைவால் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோ சமீப காலமாக மிகவும் சோர்வாக இருந்து வந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்து வந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென கடுமையான மூட்டு வலி மற்றும் ஒருசில உபாதைகள் ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக சிகிச்சைக்காக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, அவரது குடும்பத்தினர் கூறுகையில், ”சோவின் கை மற்றும் கால்களில் வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். டாக்டர்கள், மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளதால் அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளோம். கை, கால்களில் உள்ள மூட்டு இணைப்புகளில் கடுமையான வலி இருப்பதாகவும், அவர் விரைவில் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் கூறியுள்ளனர்” என்று கூறினர்.