கிறிஸ்துமஸ் தினத்தில் நாட்டையே சகதிக்காடாக்கிய நாக்டென் சூறாவளி
நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் வலிமை வாய்நத நாக்டென் சூறாவளி நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியதே இந்த சோகத்திற்கு காரணம்
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா உள்பட அனைத்துப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருந்தபோதிலும், புயலின் கோரத்தாக்குதலுக்கு இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர்.
புயல் கரையை கடந்தபோது தலைநகர் மணிலாவில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. சாலையோர தடுப்புகள், வீட்டின் மேற்கூரைகள் போன்றவையும் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் நகரம் முழுவதும் ஒரே சகதிக்காடாய் தென்படுகிறது. புயலுக்கு பின்னர் மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.