36 ஆண்டுகால பயணத்தை நிறுத்தியது சினிமா எக்ஸ்பிரஸ்

36 ஆண்டுகால பயணத்தை நிறுத்தியது சினிமா எக்ஸ்பிரஸ்

cinema expressகடந்த 1980ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் வெளியிடப்பட்டது. அதுமுதல் 36 ஆண்டுகளாக தொடர்ந்து மாதமிருமுறை வெளிவந்த இந்த பத்திரிகை இந்த மாதத்துடன் நிறுத்தப்படுகிறது.

ஒருகாலத்தில் தேசிய விருதுக்கு சமமாக சினிமா எக்ஸ்பிரஸ் விருதுக்கு நடிகர், நடிகைகள் மதிப்பளித்தனர். முதன்முதலாக ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையான சினிமா இதழ் என்ற பெயர் பெற்ற சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் நிறுத்தப்படுவது வருத்தத்திற்குரிய ஒன்றாகவே சினிமா ரசிகர்கள் கருதுகின்றனர்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் இணையதளங்கள் மூலம் உடனுக்குடன் சினிமா செய்திகள் வெளிவந்துகொண்டிருப்பதால் அவற்றுக்கு ஈடு கொடுக்க பிரிண்ட் பத்திரிகைகளால் முடியவில்லை. இருப்பினும் இந்த இதழ் மூடப்படுவது குறித்து பலர் தங்கள் கவலையை தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் நீங்கள் காண்பதுதான் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ வெளியிடும் கடைசி இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply