இன்று மக்களவையில் அமித்ஷா அதிரடி: காங்கிரஸ், திமுக தாக்குப்பிடிக்குமா?

இன்று மக்களவையில் அமித்ஷா அதிரடி: காங்கிரஸ், திமுக தாக்குப்பிடிக்குமா?

கடந்த 1955ஆம் ஆண்டு கொண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் சில திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ள பாஜக அரசு, இதுகுறித்த புதிய சட்டம் ஒன்றை இன்று மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் தாக்கல் செய்யும் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரச், திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இருப்பினும் இந்த மசோதாவை இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ள மத்திய அரசு, வரும் 12 ஆம் தேதி வரை பாஜக எம்.பி.க்கள், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் தவறாமல் பங்கெடுக்க கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் திமுக இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பதிவேடு சட்டம் அச்சுறுத்தும் வகையில் உள்ளது என்றும், 2014ஆம் ஆண்டுக்கு பின் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்த இந்துக்கள், பவுத்தர்கள், பார்சிகள், சீக்கியர் மட்டுமே இந்திய குடியுரிமை பெறுவர் என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது

Leave a Reply