ஒரே இடத்தில் பிரச்சாரம். ஓபிஎஸ்-தினகரன் ஆதரவாளர்கள் மோதல்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலைய்யில் நேற்று இரவு ஒரே இடத்தில் ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் வாக்கு சேகரித்ததால் முதலில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருவதால் பாதுகாப்புக்கு 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்/
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பல முனைப் போட்டிகள் நிலவி வந்தாலும், அதிமுகவின் இரு அணிகளாக இருக்கும் சசிகலா ஆதரவு அணியான அதிமுக அம்மா அணிக்கும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரில் பன்னீர்செல்வம் அணியாக செயல்பட்டு வரும் அணிக்கும் இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. தினகரன் மற்றும் மதுசூதனன் ஆதரவாளர்கள் புயல் வேகத்தில் பிரச்சாரம் செய்து வருகிறனர்.
இந்த நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தினகரன் மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே நேற்றிரவு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஆர்கே நகரில் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.