CBSE என்னும் 10ஆம் வகுப்பு தேர்வில் தமிழக மாணவர்கள் 99.98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் 100 சதவித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
CBSE தேர்வு முடிவுகள் நேற்று மாலை 4 மணியளவில் நாடு முழுவதும் வெளியானது. இந்த தேர்வை தமிழகத்தில் இருந்து 1,23,279 மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில் 1,22,912 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மண்டலத்தில் மட்டும் 99.58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் 99.91 சதவீதம், கோவாவில் 100 சதவீதம், டாமன் டையூவில் 100 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகாவில் 99.97 சதவீதம் பேரும், ஆந்திராவில் 99.98 சதவீதம், அந்தமான் நிகோபாரில் 98.56 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக மண்டல அலுவலர் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்வின் முடிவுகளைwww.results.nic.in, www.cbseresults.nic.in or www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் காணலாம்.