பிளஸ் 2வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன் திடீர் துறவறம்

பிளஸ் 2வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன் திடீர் துறவறம்

பொதுவாக பிளஸ் 2 வகுப்பில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர் டாக்டர் அல்லது இஞ்சினியர் படிப்புக்கு செல்ல ஆசைப்படும் நிலையில் சூரத்தில் பிளஸ் 2வில் 99% மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவன் திடீரென துறவறம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

வர்ஷில் ஷா என்ற 17 வயது சிறுவன் குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்தவர். இவர் சமிபத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வில் 99 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். அதிக மதிப்பெண் எடுத்த வர்ஷில்லோ மேல்படிப்புக்கு செல்லாமல் ஜெயின் மதத்தில் சேர்ந்து விரைவில் துறவறம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து வர்ஷில் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘என்னுடைய சிறுவயதிலேயே ஜெயின் மதத்தைச் சேர்ந்த ஸ்ரீ கல்யாண்ரத்னா விஜய் ஜி மகாராஜின் போதனைகளை கேட்டு வந்தேன். இதன் காரணமாக நான் அவரையே குருவாக ஏற்றுக்கொண்டேன். மேலும், அவரின் போதனைகள் எனக்கு மிகுந்த மன அமைதியை கொடுத்தது. இதனால், அவரின் தீட்சைப் பெற்று ஜெயின் மதத்தில் இணைய திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மகாராஜின் தீட்சைப் பெற்று வரும் அவ்ர் இன்று முதல் ஜெயின் மதத்தில் இணைந்து ஸ்ரீ கல்யாண்ரத்னா விஜய் ஜி மகாராஜின் போதனைகளை போதிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply