தபால்துறை உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், கிளார்க் உள்ளிட்ட காலியிடங்கள் Staff Selection Commission நடத்தும் Combined Higher Secondary Level (10+2) Examination மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான தேர்வு நவ.1, 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
பணிப்பிரிவு மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Postal Assistant/ Sorting Assistant:
3,523 இடங்கள்.
சம்பளம்:
ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.
2. Lower Division Clerk:
2,049 இடங்கள்.
சம்பளம்:
ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.
3. Data Entry Operator:
1,006 இடங்கள்.
சம்பளம்:
ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400 மற்றும் ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.
வயது வரம்பு:
மேற்குறிப்பிடப்பட்ட 3 பணிகளுக்கும் 1.8.2015 தேதியின் படி 18லிருந்து 27க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியும் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி:
பிளஸ் 2 தேர்ச்சி. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு மணி நேரத்தில் கம்ப்யூட்டரில் 8000 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். போஸ்டல் அசிஸ்டென்ட்/ ஷார்ட்டிங் அசிஸ்டென்ட் மற்றும் லோயர் டிவிசன் கிளார்க் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 35 ஆங்கில வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
போஸ்டல் அசிஸ்டென்ட்/ ஷார்ட்டிங் அசிஸ்டென்ட்/ டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்/ லோயர் டிவிசன் கிளார்க் ஆகிய பணிகளில் எந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் என்பதை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் கம்ப்யூட்டர் திறன் தேர்வும், போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட், லோயர் டிவிசன் கிளார்க் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் தேர்வும் நடத்தப்படும்.
எழுத்துத் தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.100. தபாலில் விண்ணப்பிப்பவர்கள் சென்ட்ரல் ரெக்ருட்மென்ட் ஃபீ ஸ்டாம்ப் மூலம் செலுத்தலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் பிரத்தியேக செலானை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம் அல்லது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நெட்பேங்கிங், கிரெடிட், டெபிட் கார்டு முறையிலும் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.
எஸ்சி., எஸ்டியினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் மாதிரி விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
http://ssconline.nic.in அல்லது http://ssconline2.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் பகுதி இரண்டு பகுதிகளை கொண்டதாகும். மேலும் விவரங்களுக்கு www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைன் படிவத்தின் பகுதி-1 ஐ நிரப்ப கடைசி நாள்: 10.7.2015
ஆன்லைன் படிவத்தின் பகுதி-2 ஐ நிரப்ப கடைசி நாள்: 13.7.2015