MBBSக்கு இணையான இந்திய மருத்துவப் படிப்புகள்

download (3)

இப்போது இந்த உலகை வியாபித்திருக்கிற ஆங்கில மருத்துவத்துக்கு (MBBS) வயது சில நூற்றாண்டுகள்தான். அதற்கு முன்பும் இங்கே  வைத்தியமுறைகள் இருந்தன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ் மாமுனிவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்கான ஆதாரங்கள்  இருக்கின்றன. ஆங்கில மருத்துவத்தின் தாக்கத்தால் பிற்காலத்தில் ‘இந்திய மருத்துவ முறைகள்’ என்றழைக்கப்படும் பிற மருத்துவ முறைகள்  மங்கிவிட்டன. ஆனால், ஆங்கில மருத்துவ சிகிச்சையில் ஏற்படும் பக்க விளைவுகள் காரணமாகவும், மருந்துகளின் விலை காரணமாகவும்  பெரும்பாலான மக்கள் இந்த இந்திய மருத்துவத்தின் திசையில் திரும்பியிருக்கிறார்கள். அரசுகளும் மருத்துவமனைகளில் ஆங்கில மருத்துவர்களை  நியமிப்பதற்கு இணையாக இந்த இந்திய முறை மருத்துவர்களையும் நியமிக்கத் தொடங்கியிருக்கின்றன.

மாணவர்கள் மத்தியிலும் இந்திய மருத்துவப் படிப்புகள் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஆங்கில மருத்துவப் படிப்பான MBBS படிப்புக்கு  இணையாக, BSMS (Bachelor of Siddha Medicine and Surgery), BAMS (Bachelor of Ayurvedic Medicine and Surgery), BHMS (Bachelor  of Homeopathy Medicine and Surgery), BNYS (Bachelor of Naturopathy and Yogic Sciences), BUMS (Bachelor of Unani Medicine and  Surgery) போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன. கல்வித்தரம், வேலை வாய்ப்பு, மதிப்பு என அனைத்திலும் MBBS படிப்புக்கு இணையான இந்தப்  படிப்புகளில் மாணவர்கள் கவனம் செலுத்தலாம்.

BSMS என்பது, சித்த மருத்துவம் சார்ந்த படிப்பு. BAMS என்பது, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய படிப்பு. BHMS என்பது ஹோமியோபதி மருத்துவம் பற்றிய படிப்பு. BNMS என்பது யோகா மற்றும்  இயற்கை மருத்துவப் படிப்பு. BUMS என்ற யுனானி மருத்துவம் பற்றிய படிப்பு. இந்த படிப்புகள் அனைத்தும் ஒரு வருட இன்டர்ன்ஷிப்புடன் கூடிய  ஐந்தரை ஆண்டு காலப் படிப்புகளாகும். +2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களை எடுத்துப் படித்து  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியல் கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்  சேர்க்கை நடைபெறும்.

இப்படிப்புகளுக்கான கல்லூரிகள் எங்கெல்லாம் உள்ளன?

அரசுக் கல்லூரிகள் சென்னையில் அரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம் உள்ளது. இந்திய மருத்துவம் மற்றும்  ஹோமியோபதி துறையின் கீழ் செயல்படும் இந்த மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, யோகா  மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரியும்,  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியும், நாகர்கோவில் அருகே கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவ  கல்லூரியும் ஆக 6 அரசு கல்லூரிகள் உள்ளன.

தனியார் சுயநிதி கல்லூரிகள்

5 தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், 3 தனியார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள், 8 தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள், 4  தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் என 20 தனியார் கல்லூரிகள் உள்ளன.

கல்லூரிகளின் பட்டியல்

சேலம் சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரி

நாமக்கல் ஹானிமன் ஹோமியோபதி கல்லூரி

ஆத்தூர் ஒயிட் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி
     
கோயம்புத்தூர் மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி
     
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீசாய்ராம் ேஹாமியோபதி மருத்துவக் கல்லூரி
     
சூலூர் R.V.S. மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி
     
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீசாய்ராம் சித்தா மருத்துவக் கல்லூரி
     
போரூர் வெங்கடேஸ்வரா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி
     
கன்னியாகுமரி அகிலா திருவிதாங்கூர் சித்த வைத்திய சங்கம்
     
ஸ்ரீபெரும்புதூர் வேலுமயில் சித்த மருத்துவக் கல்லூரி
     
கோவை கண்ணம்பாளையம் R.V.S சித்த மருத்துவக் கல்லூரி
     
ஸ்ரீபெரும்புதூர் தர்மா ஆயுர்வேதக் கல்லூரி
     
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீசாய்ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி
     
கோயம்புத்தூர் J.S.S. இயற்கை மற்றும் யோகா அறிவியல் மருத்துவக் கல்லூரி
     
சேலம் சிவராஜ் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி
     
கன்னியாகுமரி ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா அறிவியல் மருத்துவக் கல்லூரி
     
பென்னாகரம் S.V.S. யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி

இப்படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் வழக்கமாகவே காலதாமதாகவே நடக்கும். கடந்த கல்வியாண்டில் ஜூலை 14-ஆம் தேதி விண்ணப்ப  விநியோகம் தொடங்கியது. கலந்தாய்வு அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற்றது. இந்தாண்டு ஜூலை முதல் வாரத்தில் விண்ணப்பம் வழங்கப்படலாம்  என்கிறார்கள் அதிகாரிகள். சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவ வளாகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

Leave a Reply