வாக்குப்பதிவு தொடங்கியது. ஹிலாரி கிளிண்டனுக்கு அதிக ஓட்டுக்கள்
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது. ஆனாலும் இந்தியா போன்ற நாடுகளை போல வாக்குபதிவு தினத்தன்றுதான் ஓட்டு போட வேண்டும் என்ற கட்டாயம் அங்கு இல்லை. 45 நாட்களுக்கு முன்பே விருப்பமுள்ளவர்கள் ஓட்டளிக்கலாம்.
நேரில் மட்டுமின்றி இமெயிலிலும் வாக்குகள் அளிக்கும் வசதிகள் அங்கு உண்டு. அதிபர் ஒபாமாவும் அவரது குடும்பத்தினர்களும் ஒரு மாதத்திற்கு முன்பே தங்கள் வாக்குகளை பதிவு செய்துவிட்டனர்.
இந்நிலையில் இதுவரை நடந்துள்ள வாக்குப்பதிவில் ஹிலாரி கிளிண்டனுக்கு அதிக வாக்குகள் பதிவாகியிருப்பதாக செய்திகள் கூறுகின்றனர்.
மொத்தம் 4 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் உள்ள அமெரிக்காவில் இதுவரை 37 மாகாணங்களில் 1 கோடியே 25 லட்சம் பேர் ஓட்டு போட்டுள்ளனர். ஏ.பி.ஜி.எப்.கே. நடத்திய வாக்கெடுப்பில் டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் 14 புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ளார். ஹிலாரிக்கு 51 சதவீதம் பேரும், டிரம்புக்கு 37 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.