60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு இலவச பேருந்து பயணம். முதல்வர் அறிவிப்பு
60வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தை இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை இன்று காலை கூடியவுடன் விதி 110-ன் கீழ் முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதன்படி மூத்த குடிமக்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். முதல்கட்டமாக இந்த திட்டம் சென்னை பேருந்துகளில் செயல்படுத்தப்படும் என்றும் இலவச பயணம் செய்ய மூத்த குடிமக்களுக்கு மாதத்திற்கு 10 முறை பயணிக்கும் வகையில் டோக்கன்கள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. 60 வயது பூர்த்தி அடைந்த மூத்த குடிமக்கள் இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பேருந்து டெப்பொக்களில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது மாநகர போக்குவரத்து இணையதளத்திலும் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று முதல்வர் அறிவித்து உள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு மூத்த குடிமக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
Chennai Today News: CM announced Free bus travel for senior citizens.