முதல்வரின் முதல் ஐந்து கையெழுத்துக்கள் எதில் தெரியுமா?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக பொறுப்பேற்றவுடன் இன்று தலைமைச்செயலகம் வந்தார். அவருக்கு தலைமைசெயலாளர், காவல்துறை ஆணையர், மற்றும் அமைச்சர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல் கையெழுத்தாக மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும், மேலும் அவர் கையெழுத்திட்ட கோப்புகளின் திட்டங்கள் பின்வருமாறு:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவி தொகை இருமடங்காக அதிகரிப்பு. இதற்காக ஆண்டிற்கு ரூ.31 கோடி ஒதுக்கீடு
மீனவர்களுக்கு தலா ரூ.1,70,000 மதிப்பிலான 5,000 வீடுகள் கட்டித்தரப்படும்
ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்வு
உழைக்கும் மகளிருக்கு இருசக்கரம் வாங்க 50% மானியம்