பிரதமருடன் முதல்வர் இன்று சந்திப்பு., முக்கிய பேச்சுவார்த்தை
சமீபத்தில் தமிழக முதல்வராக பதவியேற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம் ஆட்சியை உறுதி செய்த எடப்பாடி பழனிச்சாமி, பாரத பிரதமர் நரேந்திரமோடியை இன்று சந்திக்கவுள்ளார். இதற்காக அவர் நேற்றிரவு டெல்லி சென்றதாகவும், அவருடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகளும் டெலி சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சமீபத்தில் கோவை வந்திருந்தபோது பிரதமரை மரியாதை நிமித்தம் சந்தித்த முதல்வர் பழனிச்சாமி இன்று தமிழகத்தின் கோரிக்கைகளுடன் டெல்லியில் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின்போது , நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது. தமிழகத்துக்கு உடனடியாக வறட்சி நிவாரண நிதியை ஒதுக்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அவர் முன்னிறுத்துவார் என்று தெரிகிறது.
மேலும் பிரதமரை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோரையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது