முதல்வர் கவலைக்கிடம். சென்னை தனியார் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை
சற்று முன்னர் சென்னை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பதட்டமான சூழ்நிலை தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள் இன்று அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளன. மாணவர்கள் அனைவரும் தற்போது வீடு திரும்பி கொண்டிருக்கின்றனர்.