கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட காவலர் முனுசாமிக்கு ரூ.1 கோடி. முதல்வர் அறிவிப்பு
தர்மபுரி மாவட்டம் ஓசூர் அருகே கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க முயற்சி செய்த காவலர் முனுசாமியை கொள்ளையர்கள் சரமாரியாக கத்தியால் குத்தினர். இதனால் படுகாயம் அடைந்த முனுசாமி பரிதாபமாக மரணம் அடைந்தார்.
இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்த காவலர் முனுசாமியின் குடும்பத்துக்கு ரூ 1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ”ஓசூரில் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட காவலர் முனுசாமி குடும்பத்துக்கு ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படும். மேலும், காவலர் முனுசாமியின் மகள் படிப்பு செலவையும் அரசே ஏற்கும்” என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.