சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதி.
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டத்தை கூட்டத்தை கூட்டி ஆலோசனையில் இருந்தபோது திடீரென அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் இரவு 10. 15 மணிக்கு கிரீம்ஸ் ரோடு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்வர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியதால், நள்ளிரவில் அதிமுக தொண்டர்கள் மருத்துவமனை முன் பதட்டத்துடன் கூடினர். இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், முதல்வர் உடல்நிலை குறித்த செய்தி குறிப்பை வெளியிட்டது. அதில், “திடீர் காய்ச்சலின் காரணமாகவும், உடலில் நீர்சத்து குறைந்ததன் காரணமாகவும், முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது நலமாக இருக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து அவர் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.
முதல்வர் உடல்நிலை குறித்த தகவல் வெளிவந்ததும் மருத்துவமனை முன் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி, சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் ராம் மோக்ன் ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், காவல் துறை டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் மருத்துவமனையில் குவிந்ததனர். இன்று காலை 7 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.