ஜெயலலிதா மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. மு.க.ஸ்டாலின்
திமுகவுடன் இணைந்து மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று முதல்வர் ஜெயலலிதாவும், எதிரிக்கட்சியாக இல்லாமல் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று மு.க.ஸ்டாலினும் கூறிய நிலையில் திமுக, அதிமுக என இரண்டு கட்சி தலைவர்களும் பக்குவப்பட்ட மனநிலைக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காயிதே மில்லத்தின் 121-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவை மீட்போம் என முதல்வர் கூறியிருந்தார். அதன்படி கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்” என்று கூறினார்.
சட்டசபையில் தற்போது அதிமுக -திமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமே 90% இருப்பதால் இரண்டு கட்சிகளும் ஒன்றுக்கொன்று மக்கள் பிரச்சனையை தீர்ப்பதில் ஆர்வம் காட்டினால் தமிழ்நாடு விரைவில் இந்தியாவின் முதல் மாநிலமாக திகழும் என டுவிட்டரில் பலர் கருத்து கூறியுள்ளனர்.