இன்று மாலை வீடு திரும்புவாரா முதல்வர் ஜெயலலிதா?
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு காய்ச்சல் காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அவருக்கு ஏற்பட்டிருந்த காய்ச்சல் குணமாகிவிட்டதாகவும், இதனால் அவர் தற்போது அப்பல்லோ ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
2 மணி நேரத்துக்கு ஒருமுறை அவரது உடல் நிலையை டாக்டர்கள் கவனித்து வருவதாகவும், நேற்று காலை முதல் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட வழக்கமான உணவை சாப்பிட அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனயில் ஜெயலலிதாவுக்கு 12 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் ஒரு சில முடிவுகள் மட்டுமே வந்துள்ளதாகவும், மற்ற அனைத்து முடிவுகளும் இன்று மாலைக்குள் வந்துவிடும் என்றும் அதன் பின்னர் ஜெயலலிதா இன்று மாலை வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா குணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி வெளியானதை அடுத்து இன்று காலை முதல் ஆஸ்பத்திரியில் தொண்டர்கள் கூட்டம் குறையத் தொடங்கியது. என்றாலும் ஆஸ்பத்திரியைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.