வெள்ள நிவாரணப்பணியின்போது மீடியாக்களுக்கு போஸ் கொடுத்து விளம்பரம் செய்ய வேண்டாம். அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

வெள்ள நிவாரணப்பணியின்போது மீடியாக்களுக்கு போஸ் கொடுத்து விளம்பரம் செய்ய வேண்டாம். அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
jayalalitha
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து லட்சக்கணக்கான மக்கள் தத்தளிப்பதால் மீட்புப்பணிகளை முதல்வர் முடுக்கிவிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர்  மூன்று அணியாகப் பிரிந்து மீட்புப்பணியைக் கவனிக்கும்படி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.

இவர்களுடன், சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 7 ஐ.ஏ.எஸ்-களை முதலில் அனுப்பிய முதல்வர், அடுத்தகட்டமாக ஏழு பேர்களைக் கூடுதலாக அனுப்பியுள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் இணைப்பாளர்களாகச் செயல்பட வசதியாக மற்ற அரசுத் துறையினரை ஒத்துழைக்கும்படி முதல்வர் சில முக்கிய அதிகாரிகளிடம் போனில் பேசியுள்ளார்.

‘மீடியாக்களுக்கு போஸ் கொடுக்கும் வேலையில் யாரும் இறங்கக் கூடாது’ என்று கறாராகவே முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், கட்சிப் பிரமுகர்கள் விளம்பரத்துக்காக ஏதாவது வெள்ள நிவாரண உதவி செய்ததாகத் தெரிய​வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்பபடும்’ என்று முதல்வர் எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

English Summary: CM Jayalalitha warned to Ministers and Officers

Leave a Reply