நடிகர் பார்த்திபனுக்கு ஜெயலலிதா எழுதிய நன்றி கடிதம்

நடிகர் பார்த்திபனுக்கு ஜெயலலிதா எழுதிய நன்றி கடிதம்

jaya
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்த ஜெயலலிதாவுக்கு திரையுலகை சேர்ந்த பலர் நேரிலும் சமூக வலைத்தளங்கள் மூலம், கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் பிரபல நடிகர், இயக்குனர் பார்த்திபனும் தனது பாணியில் ஒரு வாழ்த்து கடிதத்தை அனுப்பியிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து பார்த்திபனுக்கு தற்போது முதல்வரிடம் இருந்து பதில் நன்றிக்கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

அன்பார்ந்த திரு.பார்த்திபன் அவர்களுக்கு,

அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் 2016-ல் எனது தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அமோக வெற்றி பெற்றமைக்கு என்னை பாராட்டி தாங்கள் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் நான் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஊக்கம் அளித்திடும் தங்களின் பாராட்டுதலுக்கு எனது நன்றி’

இந்த கடிதம் குறித்து பார்த்திபன் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘பால்-ன்னு ஒரு மகிழ்ச்சி தபால் கண்டதும். குழந்தை கடத்தல் தடுக்கப்பட்ட என்ற நற்செய்தியும் வரும் என்பது நம்பிக்கை’ என்று கூறியுள்ளார்.

jaya

Leave a Reply