அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 6 அமைச்சர்கள் நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசியுள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பின்னர் சுப்ரீம் கோர்ட் அளித்த ஜாமீனால் விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதாவை முதல்முறையாக தமிழக அமைச்சர்கள் சந்தித்துள்ளனர். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது தற்கொலை செய்து கொண்ட குடும்பங்களுக்கு சரியான முறையில் நிதியுதவி சேர வேண்டும் என்றும், அரசின் திட்டங்கள் மக்களுக்கு உரிய வகையில் சென்றடைய வேண்டும் என்றும் ஜெயலலிதா அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
விரைவில் கூடவிருக்கும் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் அமல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.