எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வதா? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

எல்ஐசி பங்குகளை விற்பனை செய்ய எடுத்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

எல்ஐசி-இன் 5% பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது தனியார்மயத்தை நோக்கிய விரும்பத்தகாத செயல் எனவும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

எல்.ஐ.சி பங்குகளை விற்க அனுமதி கேட்டு மத்திய அரசு இன்று செபியிடம் அனுமதி கேட்டுள்ள நிலையில் முதல்வரின் இந்த வலியுறுத்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.