மழை நீர் வெளியேற்றும் பணி: நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்
மழை நீர் வெளியேற்றும் பணியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்காத வகையில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் மழை நீர் வெளியேறும் பணிகளை நேற்று இரவு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்தார்.