டோனியர் விமானத்தின் பாகங்களுடன் மனித எலும்புக்கூடுகள். 3 விமானிகளின் எலும்புக்கூடுகளா?

டோனியர் விமானத்தின் பாகங்களுடன் மனித எலும்புக்கூடுகள். 3 விமானிகளின் எலும்புக்கூடுகளா?

Dornier planeகடந்த மாதம் 8ஆம் தேதி 3 விமானிகளுடன் காணாமல் போன டோர்னியர் விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மீட்புப்படையினர், கடலில் இருந்து விமானத்தின் பாகங்களோடு கைக்கடிகாரம், மனித எலும்புக்கூடுகள் ஆகியவற்றையும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு படையின் கிழக்கு பிராந்திய ஐஜி ஷர்மா தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய  கடலோர பாதுகாப்பு படையின் கிழக்கு பிராந்திய ஐஜி ஷர்மா, டோர்னியர் விமானத்தின் பெரும்பாலான பாகங்கள் கிடைத்துள்ளதாகவும், இத்துடன் விமானத்தை தேடும் பணி நிறைவடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். டோர்னியர் விமானத்தின் 80 சதவிகித பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று கூறிய ஷர்மா, விமானத்தை தேடும் பணி கடும் சவாலாக இருந்ததாகவும், மீட்புக்குழுவினர்களால் மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை ஆய்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தேடுதலின் போது கடலில் இருந்து விமானியின் கைக்கடிகாரம், எலும்புக்கூடுகள் ஆகியவை கிடைத்துள்ளது என்றும் கூறினார்.

விமானத்தின் கடினமான பாகங்களை சென்னைக்கு எடுத்து வரும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்த ஷர்மா, கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

Leave a Reply