அமெரிக்காவில் உள்ள ஹவாஸ் என்ற பகுதியை சேர்ந்த ரான் இன்கிர ஹாம் என்ற 67 வயது மீனவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீன் பிடிக்க படகில் தனியாக சென்றார். அவர் சென்ற 25 அடி நீள சிறிய படகு நடுக்கடலில் திடீரென மூழ்கிவிட்டது. இதனால் தண்ணீரில் பல நாட்கள் தத்தளித்து இறுதியில் 12 நாட்கள் கழித்து 46 மைல்கள் தொலைவில் உள்ள ஒரு கரையில் ஒதுங்கினார்.
12 நாட்களாக உணவு தண்ணீர் இல்லாமல் மயங்கிக்கிடந்த அவரை கடலோர காவல் படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே கடலில் மீன் பிடிக்க சென்றவர் கரை திரும்பாததால், அவர் கடலில் மூழ்கி இறந்திருக்கக்கூடும் என்று நினைத்து அவருடைய உறவினர்கள் அவருக்கு இறுதி சடங்கு செய்ய தயாராகியிருந்தனர்.
பின்னர் கடற்படையினர்களால் தங்கள் உறவினர் காப்பாற்றப்பட்டதை அறிந்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.