கோபா அமெரிக்க கால்பந்து. அர்ஜெண்டினாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது சிலி
உலக கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி போட்டி நேற்று சாண்டியாகோ என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை இறுதிப்போட்டியில் முதன்முதலாக சிலி அணி சந்தித்தது.
அர்ஜெண்டினா அணிதான் இந்த கோப்பையை வெல்லும் என அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் சிலி அணி தனது அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஒருமுறைகூட அர்ஜெண்டினா அணியை வெல்ல முடியாத சிலி, இறுதியில் அந்த அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடினர். கோல் போடுவதை விட எதிரணியினர் கோல்போடுவதை தடுக்கும் உத்வேகத்துடன் இரு அணிகளும் விளையாடியதால் முதல்பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல்கள் எதுவும் போடவில்லை.
இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் தடுப்பாட்டத்தை தொடர்ந்ததால், ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 0-0 என்ற நிலையில் இருந்தது.
இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. சிலி முதலில் வாய்ப்பைப் பெற்றது. அந்த அணியின் பெர்னான்டஸ் முதல் வாய்ப்பை கோலாக மாற்றினார். அர்ஜென்டினாவின் முதல் வாய்ப்பை மெஸ்ஸி கோலாக மாற்றினார். இதுதான் அந்த அணி சார்பில் அடிக்கப்பட்ட ஒரே கோல்.
2-வது வாய்ப்பை சிலியின் விடால் சரியாகப் பயன்படுத்தி கோலடித்தார். ஆனால், அர்ஜென்டினாவின் ஹுகுவெய்ன் கோல் கம்பத்தை விட மிக உயரமாக பந்தைத் தூக்கி அடித்து அர்ஜென்டினாவின் பின்ன டைவுக்கு வித்திட்டார்.
சிலியின் அரான்குய்ஸ் தனது அணிக்கான 3-வது வாய்ப்பை கோலாக்கினார். அர்ஜென்டினா பதற்றத்துடன் 3-வது வாய்ப்பை எதிர்கொண்டது. பனேகா அடித்த பந்து நேராக சிலி கோல்கீப்பர் பிராவோவை நோக்கிச் சென்றது. அவர் அதை அநாசயமாக தடுக்க அரங்கம் ஆர்ப்பரிப்பால் அதிர்ந்தது