மாவோயிஸ்ட்களை கட்டுப்படுத்த கொரில்லா படைகள். சத்தீஷ்கர் அதிரடி நடவடிக்கை

மாவோயிஸ்ட்களை கட்டுப்படுத்த கொரில்லா படைகள். சத்தீஷ்கர் அதிரடி நடவடிக்கை

வட இந்தியாவில் மாவோயிஸ்ட்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது அம்மாநிலத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது.

இந்த நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் 2000 கோப்ரா கொரில்லா படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் விரைவில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது

மேற்குவங்கம், பீகார், தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ஆகிய மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு வரும் இந்த கோப்ரா கொரில்லா வீரர்கள் அனைவரும் மாவோயிஸ்ட்கள் அதிகம் உள்ள பகுதியான பஸ்தார் பகுதியில் நிறுத்தப்பட உள்ளனர். இந்தப் பகுதியை மாவோயிஸ்ட்களிடம் இருந்து முற்றிலும் விடுவிப்பதே இந்த படையினர்களின் தலையாய பணியாகும்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ”கோப்ர படையில் பயிற்ச்சியளிக்கப்ட்ட திறன் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். புலனாய்வு கொடுக்கும் துப்புகளின் அடிப்படையில் நமாவோயிஸ்ட்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு, தாக்குதல் நடத்தப்படும். மாவோயிஸ்ட்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்தப் படை பயன்படுத்தப்படுகிறது’ என்றார்.

Leave a Reply