தடையை மீறி சேவல் சண்டை: விஜயவாடாவில் பதட்டம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஆண்டு தடைவிதிக்கப்பட்டது போல் ஆந்திர மாநிலத்தில் சேவல் சண்டைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை இன்னும் விலக்கப்பாஅத நிலையில் தடையை மீறி ஆந்திராவின் விஜயவாடா பகுதியில் சேவல் சண்டை நடந்து வருவதால் அங்கு பதட்ட நிலை நிலவுகிறது
விஜயவாடா காவல்துறையினர் தடையை மீறி சேவல் சண்டைகளை நடத்தக்கூடாது என்று அமைப்பாளர்களிடம் எச்சரித்துள்ள போதும் அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் சேவல் சண்டைக்கு ஆளும் தெலுங்கு தேச கட்சிப் பிரமுகர்கள் ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது.
தடையை மீறி நடந்து வரும் இந்த சேவல் சண்டைகளில் பல ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களும் எம்பிக்களும் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது