அரிவாளுக்கு விடை கொடுத்த இளநீர் துளைபோடும் கருவி. கர்நாடக இளைஞர் கண்டுபிடிப்பு.

cocunut waterஇளநீரை வெட்டுவதற்கு இனி அரிவாள் தேவையில்லை. ஒரு சிறு துளைபோடும் கருவி இருந்தால் போதும் என்று மெய்ப்பித்துள்ளார் ஒரு இளைஞர்.

அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்பங்கள் பரவி வரும் நிலையில் இளநீரை மட்டும் பழைய முறையில் அரிவாள் கொண்டு வெட்டித்தரும் நடைமுறை இன்று வரை இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற கையடக்கக் கருவி ஒன்று கர்நாடக மாநிலம் புத்தூரில் உள்ள சாரதாம்பாள் இன்ஜினீயரிங் நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது.

இந்தக் கருவியை திருச்சியில் 3 நாட்களாக நடைபெற்ற வேளாண் உயர்நிலை மாநாடு மற்றும் கண்காட்சியில், பெங்களூருவைச் சேர்ந்த ஜானகி ராமன் என்ற இளைஞர் அறிமுகப்படுத்தியிருந்தார். இவர்தான் இந்த கருவியை கண்டுபிடித்தவர் என்பது குறிப்ப்பிடத்தக்கது. இந்த கருவி மூலம் இளநீரில் சிறிய அளவில் துளை போட்டு பின்னர் ஸ்ட்ரா மூலம் உறிஞ்சி குடிக்கலாம்.

 இதுகுறித்து ஜானகிராமன் கூறும்போது, “இந்தப் புதிய கருவி கர்நாடகத்தில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருவியை நான் சந்தைப்படுத்தி வருகிறேன். தமிழகத்தில் முதன்முறையாக திருச்சியில் அறிமுகம் செய்துள்ளேன். இதன் விலை ரூ.185 என்றபோதிலும், வேளாண் கண்காட்சியில் ரூ.100-க்கு விற்பனை செய்தேன்.

இளநீரை வீட்டுக்கு வாங்கிச் செல்லும்போது, இனி அரிவாளைத் தேடிக் கொண்டிருக்கத் தேவை யில்லை. மேலும், அரிவாளைப் பயன்படுத்தி னால் காயம் ஏற்படுமோ என்ற அச்சமும் இருக்காது. புதிய கருவியைப் பயன்படுத்தி, சிறியவர் முதல் பெரியவர்கள் வரை எளிதில் இளநீர் குடிக்கலாம்” என்றார்.

Leave a Reply