விருதுநகரில் இருந்து அமெரிக்கா செல்லும் தேங்காய் சிரட்டைகள்:

என்ன காரணம் தெரியுமா?

விருதுநகரில் இருந்து அமெரிக்காவுக்கு தேங்காய் சிரட்டைகள் ஏற்றுமதியாகி உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

விருதுநகர் மாவட்ட தென்னை விவசாயிகளிடம் இருந்து கிடைக்கும் தேங்காய் சிரட்டைகள் நெருப்பில் வாட்டி பவுடராக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது

தேங்காய் சிரட்டை கிலோ 8 ரூபாய்க்கு வாங்கிய நான்குடன் தொட்டிகள் நெருப்பில் வேக விட்டு அதனை பின்னர் சாம்பலாக்கி அந்த சாம்பலை வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழில் கடந்த சில ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

அழுக்கு நீக்கும் தன்மை இந்த தேங்காய் சிரட்டையில் இருப்பதால் இந்த பொருளை பயன்படுத்தி பியூட்டி கிரீம், குளியல் சோப்பு, தண்ணீர் சுத்திகரிப்பு போன்ற பொருள்களை இதன் மூலம் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த தேங்காய் சிரட்டை பவுடருக்கு பெரும் வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து விருதுநகரில் இருந்து அமெரிக்காவிற்கு அதிக அளவிலான தேங்காய் சிரட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply