கடந்த 2015 ஆம் ஆண்டில் இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களைக் காட்டிலும் காக்னிசன்ட் அதிக வருவாயை ஈட்டியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி இந்தியாவில் கணிசமாக இருந்துகொண்டிருந்தாலும் எல்லா நிறுவனங்களும் ஒரே மாதிரியான வருவாயை ஈட்டுவதில்லை.
இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் மொத்த வருவாய் காக்னிசன்டின் வருவாயை விடக் குறைவாக உள்ளது. 2015 ஆம் ஆண்டில் காக்னிசன்ட் நிறுவனத்தின் மொத்த வருவாய் 83 ஆயிரம் கோடி ஆகும்.
2015 ஆம் ஆண்டில் டிசிஎஸ் 7.8% வளர்ச்சியும், இன்ஃபோசிஸ் 6.6% வளர்ச்சியும், விப்ரோ 3% வளர்ச்சியும் அடைந்துள்ளன. ஆனால் காக்னிசன்ட் 21% வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.