கோவை மண்டல சிறைத்துறை டி.ஐ.ஜி. கோவிந்தராஜ் நாளை மறுநாள் திங்கட்கிழமை ஓய்வு பெறும் நிலையில் இன்று அவரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கோவை சிறை அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மத்திய சிறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரினைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்ய மிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்த சிபி.ஐ விசாரணையின் முடிவில் தனது அறிக்கையை சி.பி.சி.ஐ.டி, மாநில உள்துறை அமைச்சகத்திடம் சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் கோவை சிறையில் முறைகேடுகள் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. கூறியதோடு அதற்கான ஆதாரங்களையும் அதிகாரிகள் தமிழக அரசிடம் சமர்பித்திருந்தனர்.
இந்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ,கோவை மண்டல சிறைத்துறை டி.ஐ.ஜி. கோவிந்தராஜ் இன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தனது சஸ்பெண்ட் குறித்து கூறிய கோவிந்தராஜ், ‘தனது 30 ஆண்டு கால பணியில் எந்த தவறும் தான் இழைக்கவில்லை என்றும், தன் மீதான நடவடிக்கையால் அநீதி வென்றிருக்கிறது, எனினும் நீதி விரைவில் வெல்லும் என்று கூறியுள்ளார்.