பைக் ரேஸில் 20 வயது வாலிபர் மரணம். ஹெல்மெட் கம்பெனி மீது பெற்றோர் வழக்கு

பைக் ரேஸில் 20 வயது வாலிபர் மரணம். ஹெல்மெட் கம்பெனி மீது பெற்றோர் வழக்கு

coimbatoreகோவையில் நடைபெற்ற பைக் ரேஸ் ஒன்றில் ஹெல்மெட் அணிந்து போட்டியில் கலந்து கொண்ட 20 வயது வாலிபர் தலையில் பலத்த காயமடைந்து மரணம் அடைந்ததால், அந்த வாலிபரின் பெற்றோர் ஹெல்மெட் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கோவையை சேர்ந்த நந்தகுமார் என்பவர் சமீபத்தில் நடைபெற்ற பைக்ரேஸில் கலந்து கொண்டார். மிக வேகமாக பைக் சென்று கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் திடீரென பேலன்ஸ் இழந்த நந்தகுமார் பைக்குடன் கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தும் ஒரு மணி நேரத்தில் மரணம் அடைந்தார்.

ஹெல்மெட்டின் தரம் குறைவாக இருந்ததால்தான் தனது மகன் மரணம் அடைந்தார் என்று கூறி நந்தகுமாரின் பெற்றோர் ஹெல்மெட் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவ்ம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply