கோவை மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என்ன? கல்லூரி நிர்வாகம் விளக்கம்
கோவை நரசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது அந்த கல்லூரியின் மாணவி லோகேஸ்வரி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவியின் மரணம் எதனால் நிகழ்ந்தது என்பது குறித்து அக்கல்லூரியின் நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி தவறி விழுந்ததே அவரது உயிரிழப்புக்கு காரணம் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி லோகேஸ்வரி இறப்பு குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஆனால் அதே நேரத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பயிற்சியாளர் குதிக்கச் செய்ததே மாணவி உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவியை கட்டாயப்படுத்தி கீழே குதிக்க செய்திருக்கும் பட்சத்தில் பயிற்சியாளருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்த வீடியோவை காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.