கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட உள்ளதை அடுத்து அதற்கான வழி காட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறையில் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்கள் ஆகியோர் 2 டோஸ் தடுப்பூசி எடுத்திருப்பது கட்டாயம் என்றும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறையில் மேலும் கூறியிருப்பதாவது
மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தரவேண்டிய அவசியமில்லை
கொரோனா சிகிச்சை மையங்கள் ஆக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்
நோய்த்தொற்று உள்ள மாணவர்களை கண்டறிந்து அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் பரிசோதனை எடுக்க வேண்டும்
இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது