கொலம்பியா: அரசு அனுமதியுடன் நடைபெறும் முதல் கருணைக்கொலை

கொலம்பியா: அரசு அனுமதியுடன் நடைபெறும் முதல் கருணைக்கொலை

mercy killகொலம்பியா நாட்டு அரசு முதல்முறையாக புற்றுநோயால் பாதிப்புக்குள்ளான ஒருவரை கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும் முடிந்தவரை அவரை மனிதாபிமானத்துடன் கருணைக் கொலைக்கு உட்படுத்த ஆவண செய்ய வேண்டும்’ என்று மருத்துவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கொலம்பியா நாட்டில் வாழ்ந்து வரும் 79 வயது ஒவிடியோ கோன்சாலேஸ் என்பவர் கடந்த சில வருடங்களாக புற்று நோய்க்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் அவர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதால் அவரை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ‘வெஸ்டர்ன் ஆன்காலஜிக்கல் கிளினிக்’ என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவரை, கருணைக் கொலை செய்ய நேற்று முன் தினம் முறைப்படி அனுமதி கொடுத்தது. இதுதான் கொலம்பிய அரசு கொடுக்கும் முதல் கருணைக்கொலை அனுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

கொலம்பியா அரசு கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி ஒருவர் எவ்வாறு கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என்ற விதிகளை அறிமுகப்படுத்தப்படுத்தியது. அந்த விதிமுறைகளை றைப் பின்பற்றி, அவரை கருணைக் கொலைக்கு உட்படுத்த‌ வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply