ஐ.எஸ்.ஐ.எஸ் ஜிகாதியை திருமணம் செய்வேன். அமெரிக்க நர்ஸின் அதிரடி முடிவு

nurseஅமெரிக்காவில் உள்ள கொலரோடா மாகாணத்தைச் சேர்ந்த ஷேனோன் கோன்லி என்னும் 19 வயது நர்ஸ் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதியை திருமணம் செய்வேன் என்று கூறியதால் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு நீதிமன்றம் 4 வருட சிறைத் தண்டனை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேனோன் கோன்லி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,‘‘என் ஆசை, ஒரு முழுமையான ஜிகாதி ஆக வேண்டும் என்பதே! அவர்களின் கொள்கைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கும் அவர்களோடு சேர்ந்து கொள்கைகளுக்காகப் போராட வேண்டும்; இல்லையென்றால், அவர்களுக்கு என்னாலான மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும் என்று ஆசை!’’ என்று கூறியதோடு மட்டுமின்றி மருத்துவ பொருள்களுடன் சிரியாவுக்கு கிளம்பவும் செய்தார். போலீஸார் அவருடைய ஃபேஸ்புக் ஸ்டேட்டஸை பார்த்து விமான நிலையத்தில் அவரை அதிரடியாகக் கைது செய்தது

இந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பளித்த நீதிபதி, ‘‘தீவிரவாதிகள் மட்டுமில்லை; தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரும் கோன்லி போன்றவர்களும் நாட்டுக்கு அச்சத்தை விளைவிக்கக் கூடியவர்கள்தான்!’’ என்று என்று கூறிய அவர் நேற்று அவருக்கு 4 வருட கடுங்காவல் தண்டனையும், 2.5 லட்சம் அமெரிக்க டாலர் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்.

தனக்கு கொடுக்கப்பட்ட தண்டனை குறித்து கருத்து கூறிய ஷேனோன், ‘‘நீதிபதி சொல்வதுபோல், என்னால் நாட்டுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. என்னுடைய நோக்கம், யாருக்கும் எந்தக் கேடும் விளைவிப்பது அல்ல; ஐஎஸ்ஐஎஸ் ஜிகாதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதே என் நோக்கம்! முடிந்தால் ஒரு ஜிகாதியைத் திருமணம்கூட செய்து கொள்வேன்!’’ என்று பதிலுக்கு வாக்குவாதம் செய்த அமெரிக்க அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இவருக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்; இவருடைய பின்புலம் என்ன என்று கோன்லியின் சமூக வலைதளப் பக்கம், போன் அழைப்புகள் போன்றவற்றை அதி தீவிரமாக அமெரிக்க போலீஸார் சோதனை போட்டு வருகிறார்கள். மேலும் இவருக்கு மனநலப் பரிசோதனை மேற்கொள்ளவும் அமெரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply